என்ஜினில் தொழில் நுட்ப கோளாறு: 139 பயணிகளுடன் சென்ற கோ ஏர் விமானம் அவசரமாக நாக்பூரில் தரையிறக்கம்

நாக்பூர்: கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் இருந்து பீகாரின் பாட்னா நகரத்திற்கு 139 பயணிகளுடன் கோ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தின் என்ஜினில் தொழில் நுட்ப கோளாறு  ஏற்பட்டதற்கான எச்சரிக்கை விமானிக்கு கிடைத்தது.  இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ஜினை நிறுத்தை வேண்டிய தேவை ஏற்பட்டது. இதையடுத்து, நாக்பூருக்கு திருப்பி விடப்பட்ட விமானம் அங்குள்ள விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. கோ ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஜி8 873 விமானத்தின் ஒரு என்ஜினில் பழுது கண்டறியப்பட்டது என நாக்பூர் விமான நிலைய இயக்குநர் தரப்பில் கூறப்பட்டது.

உடனடியாக நாக்பூரில் உள்ள விமான கட்டுப்பாடு மையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். இதன்படி விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. காலை 11.15 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. எனவே விமானம் தரையிறக்கப்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Related Stories: