வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்ள 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள்.!

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்ள 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி 01.01.2022 தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 01.11.2021 முதல் 05.01.2022 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

மேலும், வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்வதற்கும் வசதியாக 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி (Voter Helpline Mobile App) ஆகிய ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: