காட்பாடியில் கூட்டுறவு பசுமை பண்ணை அங்காடியில் கிலோ தக்காளி ₹80க்கு விற்பனை-பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

வேலூர் : காட்பாடியில் கூட்டுறவு  பசுமை பண்ணை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ₹80க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை, மற்றும் ஆந்திராவில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தக்காளி வரத்து பெரிய அளவில் குறைந்தது. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி ஒரு கிலோ ₹130 முதல் ₹150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தற்காளி விற்பனை செய்ய கூட்டுறவு துறை சார்பில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை அங்காடிகள், நடமாடும் காய்கறி மையங்கள், டியுசிஎஸ், காமதேனு, நாம்கோ, சிந்தாமணி ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் உள்ள பசுமை பண்ணை அங்காடியில் நேற்று முதல் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. 1 கிலோ தக்காளி நேற்று ₹80க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். முதல் நாளான நேற்று 250 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இனி வரும் காலங்களில் ேதவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: