×

இந்தியாவில் முதன் முறையாக பெண்கள் கருவுறுதல் 2.1க்கும் கீழ் குறைவு: ஆண்- பெண் விகிதம் பாதிக்கும் அபாயம்

புதுடெல்லி: கடந்த 2019-2020ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பு குறித்த 2வது கட்ட தரவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், ‘ நாட்டில் பெண்களின் மொத்த கருவுறுதல் விகிதம் அல்லது ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை, பழைய நிலைக்கு மீண்டும் திரும்ப முடியாத அளவுக்கு தற்போது குறைந்துள்ளது. பெண்களின் மொத்த கருவுறுதல் விகிதம் தற்போது 2.1 என்ற சராசரிக்கும் கீழ் சரிந்துள்ளது. இந்தியாவில் 3 மாநிலங்கள் மட்டுமே கருவுறுதல் வீதம் அதிகம் கொண்டவையாக காணப்படுகின்றன. பீகார் (3.0), உத்தரப் பிரதேசம் (2.4), ஜார்க்கண்ட் (2.3) என்ற அளவில் உள்ளன.

கடந்த 2005-2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட 3வது தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பின்படி மொத்த கருவுறுதல் சதவீதம் 2.7 ஆக இருந்தது. இது, 2015-2016ம் ஆண்டில் 2.2 ஆக குறைந்தது. தற்போது, 2.1 என்ற சராசரி அடிப்படையில் உள்ளது.ஆனால், 3வது தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பு மற்றும் தற்போது எடுக்கப்பட்ட 5வது சுகாதார கணக்கெடுப்பின்படி பல மாநிலங்களில் பெண்களின் கருவுறும் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு, கருத்தடை மருந்துகள், சாதனங்களை பயன்படுத்தும் விகிதம் அதிகமாகி இருப்பதே முக்கிய காரணம். 2.1 என்ற விகிதத்துக்கு கீழ் மக்கள் தொகை மாற்று கருவுறுதல் விகிதம் குறைந்தால், இந்த நிலையில், பெண்கள் கருவுறும் விகிதம் குறைந்து இருப்பதால், இந்த பாலின சமன்பாட்டில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக’ கூறப்பட்டுள்ளது.


Tags : India , For the first time in India, female fertility is below 2.1: Risk of affecting the male-female ratio
× RELATED ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம்...