மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை; தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்.!

சென்னை: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்  சட்டபேரவையின் 2021-2022 ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் மாண்புமிகு நிதியமைச்சர் மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனடிப்படையில், மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் 25.11.2021 தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திற்கு வருகை தந்து கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி மேற்குறிப்பிட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலையை கேட்டறிந்து அவ்வறிப்புகளை துரிதப்படுத்தி நிறைவேற்றுதற்கான வழிமுறைகளை வாரியத்திற்கு வழங்கியுள்ளார்.

மேலும் வாரியத்தின் மற்ற நடவடிக்கைகளையும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்து வாரியம் சுற்றுசூழலை பாதுகாப்பதில், குறிப்பாக நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாப்பது, தொழில் வளாகங்களில் அதிக பசுமை போர்வை ஏற்படுத்துவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை முறையாக செயல்படுத்துவது மற்றும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை வலியுறுத்தி சிறப்பாக செயல்பட அறிவுரை வழங்கியுள்ளார்.

Related Stories: