விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினத்தில் ரூ.1.6 கோடி செலவில் ஆதிதிராவிடர் நல கல்லூரி மற்றும் மாணவியர் விடுதி.!

சென்னை: விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினத்தில் ரூ.1 கோடி 6 லட்சம் செலவில் ஆதிதிராவிடர் நல கல்லூரி மற்றும் மாணவியர் விடுதி கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மூன்று புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.2 கோடி செலவில் தொடங்கப்படும்

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களில் தலா 50 மாணவியர்கள் வீதம் தங்கிப் பயில ஏதுவாக மூன்று ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.1,06,34,604 செலவில் தோற்றுவிக்க நிருவாக அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: