கல்பாக்கம் ஊராட்சியில் ரூ10.லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு: பொன்னேரி எம்எல்ஏ பங்கேற்பு

பொன்னேரி: கல்பாக்கம் ஊராட்சியில் ரூ.10.லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  திறக்கப்பட்டுள்ளது. பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியம் கல்பாக்கம் ஊராட்சி வெள்ளம்பாக்கம் கிராமத்தில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ரவி ஆகியோர் முன்னிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை.சந்திரசேகர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

 நிகழ்ச்சியில் திமுக மீஞ்சூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் வல்லூர், ரமேஷ் ராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, பிரியங்கா துரைராஜ், துணைத் தலைவர் பொன்னி முத்துக்குமரன், திமுக மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன், வெள்ளம்பாக்கம் திமுக கிளைக் கழக செயலாளர்கள் பாலகணபதி, ஏழுமலை சமூக ஆர்வலர்கள் குரு, அபுபக்கர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இதில் பலர் பங்கேற்றனர்.

Related Stories: