நாகை மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை ஒன்றிய குழுவினர் நேரில் ஆய்வு

நாகை: நாகை மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்கின்றனர். நாகை மாவட்டத்தில் பாப்பாக்கோவில் அருகே ஒன்றிய குழுவினர் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். கனமழையால் நாகை மாவட்டத்தில் 25,000க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா சாகுபடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மூழ்கிய பயிர்களை கண்டு விவசாயிகள் கலங்கிய நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் தற்போது பார்வையிட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டனர். இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை ஒன்றிய குழுவிடம் எடுத்து வைத்து வருகின்றனர். ஏக்கருக்கு ரூ.10,000 வழங்கிட வேண்டும், பயிர்க்காப்பீடு திட்டத்தில் பாதிப்பிற்கேற்ப இழப்பீடுகளை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் இறுதியில் தொடர்வதால் பயிர்காப்பீடு செலுத்துவதற்கான காலக்கெடுவை முன்னர் இருந்தது போல் டிசம்பர் மாதம் இறுதி வரை செலுத்த அவகாசம் வேண்டும் எனவும் ஒன்றிய குழுவினரை வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: