மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு பாம்பு, எலிகளுடன் வந்த பழங்குடியினரால் பரபரப்பு

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு பாம்புகள், எலிகளுடன் வந்த பழங்குடியின மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ்நாடு பழங்குடியின நாடோடிகள் கூட்டமைப்பு சார்பில் நிறுவன தலைவர் மகேஸ்வரி தலைமையில், ஏராளமானோர் பாம்புகள், எலிகளுடன் குடுகுடுப்பை அடித்தபடி மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்களை போலீசார் வாசலில் தடுத்தி நிறுத்தினர். பின்னர் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அனீஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனுவில், ‘‘பழங்குடியின மக்களுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின மக்களின் நலன்கருதி திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’’ என தெரிவித்திருந்தனர். பின்பு முதல்வரை வாழ்த்தியும், தமிழக அரசை பாராட்டியும் கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: