பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும்போது அதை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு: உச்சநீதிமன்றம்

டெல்லி: பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும்போது அதை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு  எடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறு, குறு, விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரியே எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: