நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி வார்டு மறுவரையறை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்

நெல்லை: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி வார்டு மறுவரையறை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியிலுள்ள 55 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மேலப்பாளையம் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மேலப்பாளையம் பகுதியில் 10 வார்டுகளும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 4 வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் வார்டு மறுவரையறை செய்யும்போது மேலப்பாளையத்திலுள்ள 10 வார்டுகளை 7-ஆக குறைத்ததுடன், சுற்றியுள்ள 4 வார்டுகளை 8 வார்டுகளாக உயர்த்தி விட்டனர். வார்டு மறுவரையறை செய்ததில் திட்டமிட்டு குளறுபடி செய்ததாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை கண்டித்து மேலப்பாளையத்தில் 1000க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். சரியான முறையில் வார்டு மறுவரையறை செய்ய மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: