ஆடு திருடர்களை விரட்டிச்சென்ற திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஆடு திருடர்களை விரட்டிச்சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் தலைஞாயிறை சேர்ந்தவர் பூமிநாதன் (55). சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான இவர், திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனும், நவல்பட்டு தலைமை காவலர் சித்திரைவேலுவும் தனித்தனியே டூவீலரில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ளனர்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பூலாங்குடி காலனி பகுதியில் இரண்டு பைக்குகளில் 4 பேர் வந்துள்ளனர். இதில் ஒரு பைக்கில், ஒரு ஆடு இருந்துள்ளது. இதனை பார்த்த சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், அவர்கள் நின்ற பகுதிக்கு சென்றபோது மர்ம நபர்கள் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு பைக்கில் தப்பினர். ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற பூமிநாதன், அவர்களை பள்ளத்துப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரும் வழியில், ரயில்வே தரைப்பாலத்தில் மடக்கி நிறுத்தினார்.

இதற்கிடையில் அந்த கும்பல், திடீரென அரிவாளால் பூமிநாதனின் தலையில் சரமாரி வெட்டியுள்ளனர்.இதில் தலையில் பலத்த காயத்துடன் பூமிநாதன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.

ந்த சம்பவத்தில் பூமிநாதனும் திருடர்களும் பயணித்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் எஸ்எஸ்ஐ கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும்தான் எஸ்எஸ்ஐயை வெட்டிக் கொன்றது என்பது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் 10 வயது, 17 வயது சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

Related Stories: