நீலகிரியில் மாவட்டத்தில் தங்கள் பாரம்பரிய விழாவை வெகு விமரிசையாக கொண்டாடிய படுகரின மக்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் படுகரின மக்கள் தங்கள் பாரம்பரிய விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். படுகர் சமுதாய மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பௌர்ணமிக்கு முன்னதாக வரக்கூடிய சனிக்கிழமை நாளில் தங்கள் முன்னோர்களை நினைவுகூரும் விழாவை கொண்டாடிவருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று  கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாலை வேளையில் வடபகுதிக்கு சென்ற படுகர் சமுதாய மக்கள் 5 வகை மலர்களை சேகரித்து கொத்தாக கட்டி வீடுகளின் கூரைகளில் கட்டினர்.

அடுப்பு விறகு எறிந்த சாம்பலால் இயற்கையை போற்றும் விதமாக சூரியன், சந்திரன், கால்நடைகள் மற்றும் விவசாய கருவிகளை அழகாக வரைந்தனர். இதையடுத்து அனைத்து வீடுகளிலும் தயார் செய்யப்பட்ட உணவு வகைகளை சேகரித்து தங்கள் முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.       

Related Stories: