வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது: நோயாளிகள் அவதி

திருப்பத்தூர்: தொடர் கனமழையால் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது. இந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 செ.மீ மழை பதிவானது. நேற்று முதல் இன்று வரை மழை தொடர்ந்து வருவதால் காட்டாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது நகர் பகுதிக்குள்ளே மழைநீரானது வர தொடங்கியுள்ளது. இதனால் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குள் தற்போது வெள்ளநீரானது சூழ்ந்துள்ளது.

புறநோயாளிகள் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு போன்ற பகுதிகளில் உள்ள நோயாளிகளை மாற்று இடத்திற்கு அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் பழைய கட்டிடங்களில் இருந்து நோயாளிகள் தற்போது புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நகர் பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் தற்போது கால்வாயில் இருந்து வெளியேறும் நீர் தான் தற்போது அரசு மருத்துவமனையை சூழ்ந்துள்ளது.

Related Stories: