எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி காலமானார்

சென்னை: எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி (84), வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். ‘பாரதி’, ‘பாபா’, ‘ஆட்டோகிராப்’, ‘புதுப்பேட்டை’, ‘அந்நியன்’, ‘ஒருத்தி’, ‘ஊருக்கு நூறு பேர்’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், மாதவன் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘மாறா’ என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’, ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’, ‘பாட்டையாவின் பழங்கதைகள்’ போன்ற புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

Related Stories: