எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி காலமானார்

சென்னை: பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி (84), வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பிறந்த பாரதி மணி என்கிற கே.கே.எஸ்.மணி, சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘பாரதி’யில், பாரதியாரின் தந்தை வேடத்தில் நடித்ததால் ‘பாரதி’ மணி என்று அழைக்கப்பட்டார். இளமைக்காலங்களில் நாடகங்களில் நடித்து வந்த அவர், பிறகு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

‘பாபா’, ‘ஆட்டோகிராப்’, ‘அந்நியன்’, ‘ஒருத்தி’, ‘ஊருக்கு நூறு பேர்’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், மாதவன் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘மாறா’ என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். பாட்டையா என்று அனைவராலும் அழைப்பட்ட பாரதி மணிக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: