கார்களில் தனியாக பயணிப்பதை தவிருங்கள்!: டெல்லியில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!!

டெல்லி: டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளதை அடுத்து மத்திய அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. கொரோனா பேரிடர் சமயத்தில் ஊரடங்கு போடப்பட்டிருந்ததால், டெல்லியில் காற்று மாசு குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், மீண்டும் காற்று மாசு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கிடையே டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் புகை நச்சுமண்டலத்தால் கடந்த 10 நாட்களாக மக்கள் அவதியுற்று வருகிறது. காற்றின் தரம் மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியில்லாத அளவுக்கு மாசடைந்து காணப்படுகின்றது.

பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் காற்று மாசு குறைந்தபாடில்லை. சாலைகள் முழுவதும் புகை சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்கவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளதை அடுத்து மத்திய அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கார்களில் தனியாக பயணிப்பதை தவிர்க்குமாறு மத்திய அரசு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில், CAR POOLING முறையில் பயணிக்கவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், மெட்ரோ ரயில், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Related Stories: