சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாம் வின்சென்ட் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் சாம் வின்சென்ட். இவரது வீடானது கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் சி பிளாக்கில் உள்ளது. இதேபோல் இவருக்கு சொந்தமாக கொளத்தூரிலும் வீடு உள்ளது. கடந்த சில நாட்களாகவே சாம் வின்சென்ட் மீது அடுக்கடுக்கான லஞ்ச புகார்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே இவர் விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றிய போதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது.