போலீசாருக்கு பஸ்சில் இலவச பயணம்: விபரம் கேட்டு தமிழக அரசு டிஜிபிக்கு கடிதம்

சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழக காவல் துறையை நவீனப்படுத்தும் வகையிலும், காவலர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை செல்படுத்தி வருகிறார். அந்த வகையில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து அரசு பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம் என்றும் இதற்காக ‘நவீன அடையாள அட்டை’ வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து உள்துறை துணை செயலாளர், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் ‘காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை எவ்வளவு பேர் உள்ளனர்.

நிதி எவ்வளவு தேவை என்பது கணக்கீடும் வகையில், சலுகையை பெறும் காவலர்கள் முதல் இன்ஸ்ெபக்டர்கள் வரை உள்ள விபரங்கள் மாவட்ட வாரியாக சேகரித்து பட்டியல் அனுப்பும் படி கேட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதைதொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் கமிஷனர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு விபரங்கள் குறித்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலின் படி விரைவில் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் வகையில் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அனைவருக்கும் ‘நவீன அடையாள அட்டை’ வழங்கப்படும் .

Related Stories: