உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் ஆலோசனை கூட்டம்: அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வது குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தினார். இதில் துணை ஆணையர்கள் விஷூ மகாஜன், சிம்ரன் ஜீத் சிங் காஹேலோன், சிவகுரு பிரபாகரன், மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளான திமுக சார்பில் கலாநிதி வீராசாமி எம்.பி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, காங்கிரஸ் சார்பில் தமோதரன், பாஜ சார்பில் கராத்தே தியாகராஜன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாமோதரன் கூறுகையில், ‘‘பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 1500 வாக்காளர்களுக்கு  மேல் உள்ளவர்களுக்கு ஒரே பூத்தில் வாக்களிக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்தோம். அதேநேரத்தில், வார்டு மறுவரையறை குறித்து நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கேட்டுள்ளார். கட்சி தலைவர் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து பதிலளிப்பதாக கூறியுள்ளோம்’’ என்றார்.

Related Stories: