நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம்.! முடிவை பரிசீலனை செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம்

டெல்லி: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை பரிசீலனை செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இடமாற்றம் செய்வதற்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றும், முடிவை பரிசீலனை செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு அரவிந்த் தத்தார், பி.எஸ்.ராமன் உள்ளிட்ட 31 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி சிவஞானம் இடமாற்றத்தையும், மேகலயாவிற்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம் செய்யும் பரிந்துரையையும் மறுபரிசீலனை செய்யக் கோரி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ரங்கபாஷ்யம் தலைமையிலான நான்கு பேர் கொண்ட எம்பிஏவின் இடைக்கால நிர்வாக குழுவிற்கு கடிதம் கொடுக்கப்பட்டது.  அதனடிப்படையில் நடைபெற்ற அவசர பொதுக்குழுவில் காணொளி காட்சி வாயிலாக  92 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மற்றும் நீதிபதி சிவஞானம் இடம் மாற்றம் செய்யும் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு 31 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், மேகாலயா போன்ற சிறிய மாநில உயர்நீதிமன்றங்களில் சஞ்ஜிப் பானர்ஜி அனுபவம் முழுமையாக பயன்படாது என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சஞ்ஜிப் பானர்ஜியை இட மாற்றம் செய்வதற்கான காரணங்களை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மூத்த நீதிபதி சிவஞானம் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யும் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: