இடிந்த வீடுகளுக்கு ரூ25 ஆயிரம்; நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ20 ஆயிரம் நிவாரணம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மழைகால நிவாரண பணிகள்  தொடர்பாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், தொடர் மழை காரணமாக விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரக்காலில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம்  நிவாரணம் வழங்கப்படும். இதேபோல் 1,000 ஹெக்டேர் அளவுக்கு விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் நெற்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். 

தற்போது மழை ஓய்ந்த நிலையில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இனிமேல்தான் பாதிப்பின் முழு விபரம் தெரியவரும், கூடுதல் பாதிப்புகள் மற்றும் பயிர்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றையும் கணக்கெடுத்து அரசு நிவாரணம் வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: