கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 அமைச்சர்கள் கொண்ட குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று தங்களது ஆய்வை தொடங்கினர். கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் பாதிப்பு விவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் கொண்ட இந்த குழு டெல்டாவில் இன்று ஆய்வு பணியை தொடங்கியது. தஞ்சை மாவட்டம் மதுக்கூரை அடுத்த மோகூர் பகுதியில் பாதிப்படைந்த விளை நிலங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பயிர் சேதங்கள் குறித்து பாதிப்படைந்த விவசாயிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். இதையடுத்து திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யவுள்ளனர்.             

Related Stories: