வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..தமிழகத்தில் 2 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னை : வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னையில் இருந்து 850 கிமீ தூரத்தில் நீடிக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட மேற்கில் நகர்ந்து நாளை சென்னை கடலூர் அருகே கரை நெருங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது சென்னை - கடலூர் -தெற்கு ஆந்திர கரை வரை வளி மண்டலத்தில் மேகக் கூட்டங்கள் திரண்டுள்ளதால் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 25 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே போன்று வங்கக்கடலில் நவம்பர் 13ல் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ள வானிலை மையம், தெற்கு அந்தமான் கரையோரப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கில் நகர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நாகை, திருப்பூண்டியில் தலா 31 செமீ மழை பதிவாகி உள்ளது. காரைக்காலில் 29 செமீ, வேதாரண்யத்தில் 25.2 செமீ, தலைஞாயிறு பகுதியில் 23.6 செமீ மழை பதிவாகி உள்ளது.தமிழகத்தில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் 20 செமீ மேல் மழை பதிவாகி உள்ளது. 30க்கும் மேற்பட்ட இடங்களில் 10 செமீக்கு மேல் மழை பதிவாகி உள்ளது.  

Related Stories: