தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!: தமிழகத்துக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்..வானிலை மையம் எச்சரிக்கை..!!

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (9.11.2021) புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று 2 நாட்களுக்கு முன்னதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக நேற்று இரவு சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக கடற்கரை ஒட்டிய வட தமிழக வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருப்பதால் காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

வட தமிழகம் நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதால் தமிழகத்துக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.  வட தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை - கடலூர் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என கூறப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: