தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

வடகிழக்கு பருவமழை மிக அதிகமாக தற்போது பெய்து வருவதை அடுத்து நேற்று வானிலை மையத்தில் இருந்து 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில் தற்போது 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் தற்போது மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வட தமிழகம் அருகே 11ஆம் தேதி வரும் என்று வானிலை ஆய்வு மையம் தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் அறிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டாரங்களில் பல மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று (9ஆம் தேதிக்குள்) திரும்ப உத்தரவிடப்பட்டிருந்தது.

Related Stories: