தொழிலதிபரிடம் ரூ.1.50 கோடி கடன் வாங்கி மோசடி மாஜி ஐபிஎஸ் சிவனாண்டி மீது வழக்கு

சென்னை:  சென்னை தொழிலதிபர் கிருஷ்ணசாமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி கடந்த 2015 செப்டம்பரில் தொழில் தொடங்க கடலூரை சேர்ந்த எனது நிறுவனத்தில் இருந்து ரூ.1 கோடியை கடனாக தனது நண்பர் கணபதி ராமசுப்பிரமணியம்  மூலம் பெற்றார். இதற்கான ஒப்பந்தத்தில் சாட்சிகளாக  சிவனாண்டி மனைவி டாக்டர் கொண்டம்மாள், ஏட்டு மணிமாறன் ஆகியோர் கையொப்பமிட்டனர். ஒரு கோடிக்கு 24% வட்டி வழங்க சம்மதித்திருந்தனர். 3 மாதம் மட்டுமே வட்டி கொடுத்த சிவனாண்டி பின்னர் வட்டி கொடுக்கவில்லை. அதேபோல், கடந்த 2002 ஆண்டிலும் சிவனாண்டி நெல்லையில் குளிர்பான  நிறுவனம் தொடங்க ரூ.50 லட்சம் கடனாக பெற்றார்.பல முறை கேட்டும் பணம் கொடுக்க மறுக்கும் அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் கிருஷ்ணசாமியிடம் ரூ.1.50 கோடி கடன் பெற்று மோசடி செய்த  முன்னாள் ஐபிஎஸ் சிவனாண்டி,  கணபதி ராமசுப்பிரமணியன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: