அகவிலை படியை முன்தேதியிட்டு வழங்க வேண்டும்: ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு: 14 அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் 2வது மாவட்ட பேரவை செங்கல்பட்டில் நேற்று மாவட்ட தலைவர் கே.வி.வேதகிரி தலைமையில் நடைபெற்றது. இதில், சங்கக் கொடியை மாநிலத் துணைத் தலைவர் த.குப்பன் ஏற்றி வைத்தார்.  மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.சண்முக சுந்தரம் இரங்கல் தீர்மானம் வாசித்தார். செங்கல்பட்டு வட்டக் கிளை தலைவர் ஓ.செல்வமணி வரவேற்றார். கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் வெ.லெனின் துவக்கி  வைத்தார்.

இதனை தொடர்ந்து, வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் ப.பன்னீர்செல்வம், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ஜெ.செல்வன் ஆகியோர் சமர்ப்பித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளா் மு.தாமோதரன் துறைசார் சங்கங்களின் நிர்வாகிகள் வி.ஞானசம்பந்தன், நாராயணசாமி, குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் 14 விழுக்காடு அகவிலைப்படியை 1.7.21 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி, ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்சம் ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும், செங்கல்பட்டு நகரில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: