குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழக கடலோர பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் நவம்பர் 9ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதால் தமிழ்நாட்டில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் நோக்கி நகரக் கூடும் என்றும் கூறியுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை முதல் குமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நவம்பர் 9ஆம் தேதி முதல் தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Stories: