முழு மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் தீபாவளி நாளன்று கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலி

பீகார்: முழு மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் தீபாவளி நாளன்று கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பு என ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசு நடைபெற்றுவருகிறது.

தீபாவளி திருநாளான  நேற்று பீகார் மாநிலத்திலுள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 16 பேரும், மேற்கு சம்பிரான் மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உயிரிழக்க கள்ளச்சாராயம் குடித்ததே காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பீகார் மாநிலத்தில் இது போன்ற உயிரிழப்பு நிகழ்வது கடந்த 10 நாட்களில் மட்டுமே இது 3-வது முறையாகும்.

எனினும் இவை கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த உயிரிழப்பு என்பதை பீகார் மாநில காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் தீபாவளி நாளன்று கள்ளச்சாராயத்தால் 35 பேர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ள ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி முழு மதுவிலக்கு என்பது பீகாரில் ஏட்டளவில் மட்டுமே உள்ளதாகவும் சாடியுள்ளார்.                     

Related Stories: