சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: சித்திரை ஆட்ட திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (2ம் தேதி) திறக்கப்படுகிறது. இதில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல கால பூஜைகள் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி 15ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 16ம் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (2ம் தேதி) திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று ஒரு நாள் மட்டுமே கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். இந்த பூஜையில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories: