ரயான் நூல் விலை உயர்வு: விசைத்தறியாளர்கள் அதிர்ச்சி

ஈரோடு: ரயான் நூல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் ஈரோடு விசைத்தறியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகள் மூலம் ரயான், காட்டன் காடா போன்ற துணி ரகங்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், ஈரோட்டில் வீரப்பன் சத்திரம், சித்தோடு, லக்காபுரம் பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தறிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தீபாவளி விற்பனைக்காக பெறப்பட்ட ஆர்டர்கள் மூலம் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தற்போது அனைத்து ஜவுளி கடைகளிலும், சந்தைகளிலும் விறுவிறுப்பாக விற்பனை நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, அடுத்த உற்பத்திக்கு விசைத்தறியாளர்கள் ஆயத்தமாகி இருந்தனர். இந்நிலையில், பஞ்சு, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விசைத்தறியாளர்கள் புதிய ஆர்டர்கள் பெற்று உற்பத்தி செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது: ஜவுளியின் மூலப்பொருளான பஞ்சு கடந்த அக்டோபர் மாதம்ரூ.7 உயர்ந்து ஒரு கிலோரூ.163 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. ஆனால், செயற்கை நூல் (ரயான்) 30 கவுண்ட் ஒரு கிலோ ரயான் நூல் கோன் கடந்த 1ம் தே218 ஆக இருந்தது. கடந்த 30 நாட்களாகரூ.52 வரை கிடுகிடுவென உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரயான் நூல்ரூ. 270க்கு விற்பனையாகிறது.

ஆனால், இந்நூலின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 140 கிராம் துணி ஒரு மீட்டர்ரூ.4.50 மட்டுமே உயர்ந்து,ரூ.35க்கு விற்கப்படுகிறது. நூலின் விலை உயர்வை ஈடு செய்யரூ.41 வரை துணிகளின் விலையை உயர்த்தி இருக்க வேண்டும். இதனை செய்யாததால் விசைத்தறி உற்பத்தியாளர்களும், ஆர்டர் பெற்றவர்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சீரான விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: