9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ரூ.90 லட்சம் காசோலை: 18ம் தேதி அமைச்சர் வழங்குகிறார்

சென்னை: வாழும் தமிழறிஞர்களான முனைவர் ஆறு.அழகப்பன் அனைத்துப் படைப்புகளையும் (16 நூல்கள்) நாட்டுடைமையாக்கி ரூ,10 லட்சத்திற்கான காசோலையும், முனைவர் ராமலிங்கம் அனைத்துப் படைப்புகளையும் (27 நூல்கள்) நாட்டுடைமையாக்கி ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் மறைந்த தமிழறிஞர்களான முனைவர் சோ.சத்தியசீலன் அனைத்துப் படைப்புகளையும் (16 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான தனபாக்கியம் சத்தியசீலனுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், மா.ரா. அரசுவின் அனைத்துப் படைப்புகளையும் (7 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான திரிபுரசுந்தரிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாவலர் ச.பாலசுந்தரம் அனைத்துப் படைப்புகளையும் (29 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையர்களான மதிவாணன், பா.தமிழ்மணி ஆகிய இருவருக்கும் சேர்த்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், க.ப.அறவாணனின் அனைத்துப் படைப்புகளையும் (136 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான தாயம்மாள் அறவாணனுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், திருநாவுக்கரசுவின் அனைத்துப் படைப்புகளையும் (34 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையர்களான அம்பலவாணன், அவ்வை, பூங்கோதை ஆகிய மூவருக்கும் சேர்த்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், முனைவர் இரா.குமரவேலன் அனைத்துப் படைப்புகளையும் (8 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான தமிழரசி குமரவேலனுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், கவிஞர் கா. வேழவேந்தன் அனைத்துப் படைப்புகளையும் (16 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான பானுமதி வேழவேந்தனுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் என மொத்தம் ரூ.90 லட்சத்திற்கான காசோலைகளை வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் சாமிநாதன் வழங்குகிறார்.

The post 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ரூ.90 லட்சம் காசோலை: 18ம் தேதி அமைச்சர் வழங்குகிறார் appeared first on Dinakaran.

Related Stories: