சென்னை: சென்னை சூரியன் எப்.எம். 93.5 நேயர்களுக்கு தினம்தோறும் பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குவதோடு, சமுதாய நலன் கருதி எஸ்எம்எஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் தீபாவளி நெருங்குவதால் நாளுக்கு நாள் சென்னையின் பெரும்பாலான வணிக பகுதிகளில் கூட்டம் கூடுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இந்த தீபாவளியை எஸ்எம்எஸ் உடன் கொண்டாட வேண்டும், அதாவது எஸ்.எம்.எஸ் - சோப்பு, மாஸ்க், சமூக இடைவெளி என்பதை முன்னிறுத்தி புதுமையான முறையில் “ரெடி- ஸ்டெடி- வெடி எஸ்எம்எஸ் உடன்” வாகனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.