அடையாறு ஆறு சுற்றுச்சுவர் பணி மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் தேனாம்பேட்டை மண்டலத்தில் அடையாறு ஆற்றின் கரையில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவரை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சிமென்ட் பூச்சு மாதிரிகளை சேகரித்த மாநகராட்சி அதிகாரிகள், அதை தர பரிசோதனைக்கு அனுப்பினர்.   மேலும், மணல் மற்றும் சிமென்ட் அளவு சரியாக இருக்கிறதா என்பதை மண்டல அலுவலர்கள், பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். புளியந்தோப்பு கே.பி. பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரம் இல்லாமல் இருப்பதற்கு சிமென்ட் பூச்சு  மிகவும் மோசமாக இருந்ததாக ஐஐடி நிபுணர் குழு அறிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: