வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்துவது குறித்து தமிழக அரசு செயல் திட்டம் வகுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:  சேலம் மாவட்டம், தாத்தையாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி வீடில்லா ஏழை மக்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவர் கருமலை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ்அப்போது, அரசு பிளீடர் பி.முத்துக்குமார், ட அந்த நிலம், பள்ளி கட்டிடம் கட்ட ஒதுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு தாசில்தாரரால் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 இதை பதிவு செய்த நீதிபதிகள், மக்கள் நல அரசு வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும். அதேசமயம் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது. வீட்டு மனை ஒதுக்க கோரி மீண்டும் புதிதாக மாவட்ட ஆட்சியருக்கு மனுதாரர் மனு அனுப்பலாம். அதேசமயம் தமிழகம் முழுவதும் வீடற்ற ஏழை மக்களுக்கு நிலம் அல்லது வீடு வழங்குவது தொடர்பாக விரிவான செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். இதற்காக மாவட்டவாரியாக நிலங்களை அடையாளம் காண வேண்டும் என்று அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories: