நவம்பர் 6ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை

சென்னை: வரும் நவம்பர் 6ம் தேதி நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, உணவுப் பொருள் வழக்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆணையர் ஆனந்தகுமார், அனைத்து மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 1, 2, 3ம் தேதிகளில் கூடுதல் பணிநேரம் செயல்படுவதால் 6ம் தேதி பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் 7ம் தேதி வழக்கம் போல் நியாயவிலைக் கடைகள் செயல்படும்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories: