கள்ளக்குறிச்சி மாவட்டம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பிரதான சாலையிலுள்ள பட்டாசு கடையில் நேற்று மலை சுமார் 6:30 அளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தொடர்ந்து பட்டாசு கடையிலிருந்த அனைத்து விதமான பட்டாசுகளும் வெடித்து சிதற தொடங்கியது.

இதனை தொடர்ந்து அருகிலிருந்த கடைகளிலுள்ள சிலிண்டர்கள் வெடித்து சிதற தொடங்கின. இந்த பயங்கர வெடி விபத்தில் சுமார் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 10 க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு முதலே தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் இந்த பகுதியில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இடர்பாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தடவியல் நிபுணர் நேரடி சோதனையில் ஈடுபட்டுள்ளார் மேலும் பொதுமக்கள் இப்பகுதியில் நுழையாதவாறு காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

Related Stories: