வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : வங்க கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

‘‘வங்க கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும்.

இன்றைய மழை நிலவரத்தை பொறுத்தவரை, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராம நாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். கடலோரா மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் லேசான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்” என்று தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>