அரூர் அருகே சீமை கருவேல மரங்கள் அகற்றம்

அரூர் : அரூர் அருகே, நீராதாரங்களை பாதிக்கும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டது. அரூர் அடுத்த தண்டகுப்பம் கிராமத்தில் மோப்பிரிப்பட்டி பஞ்சாயத்தில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இவையாவும் நீராதாரத்தை பாதிக்கும் என்பதால் இம்மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து குழு சார்பில் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையால் செழித்து வளர்ந்த சீமை கருவேல மரங்கள் பஞ்சாயத்து குழு சார்பில் அழிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அரூர் பகுதியில் உள்ள ஏரி பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாயத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: