தமிழகத்தில் 1090 பேருக்கு பாதிப்பு.! சரிந்து வரும் கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து நேற்று 1090 ஆக பதிவாகியது. தொற்றில் இருந்து 1326 பேர் குணமடைந்தனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1090 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்தவகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,97,418 ஆக உள்ளது. நேற்று கொரோனாவில் இருந்து 1,326 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,48,830 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 15 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது வரை 12,540 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று 141 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. கோவையில் 128 பேர், செங்கல்பட்டில் 93 பேர், ஈரோடு 67 பேருக்கு அதிகபட்ச பாதிப்பு காணப்பட்டது. சென்னைஉட்பட 28 மாவட்டங்களில் நேற்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>