திருக்கோயில்களில் மாவட்ட அறங்காவலர் குழு நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன: இந்து சமய அறநிலையத்துறை

சென்னை: திருக்கோயில்களில் மாவட்ட அறங்காவலர் குழு நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் ரூ.10 இலட்சத்திற்கு மிகாமல் ஆண்டு வருவாய் பெறும் இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் 22/1959 சட்டப்பிரிவுகள் 49 (1), 46 (1) மற்றும் 46 (2) -ன்படி பட்டியலிடப்பட்ட திருக்கோயில்களில் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட சென்னை மண்டலத்தில், மாவட்ட அறங்காவலர் நியமன குழு பூர்த்தியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படியான விண்ணப்பங்கள் இவ்வறிவிப்பு வெயியிடப்பட்ட நாளிலிருந்து 09.11.2021 தேதியன்றாவது அல்லது அதற்கு முன்பாவது “உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, பாடி, சென்னை - 50 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் இதர விவரங்களை சென்னை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் தண்டையார் பேட்டை / புரசைவாக்கம் / எழும்பூர் / பெரம்பூர்/ மாம்பலம்/ வேளச்சேரி/ மயிலாப்பூர் அலுவலகங்களில், அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம் பெற்று கொள்ளும் தேதியன்று விண்ணப்பதாரர் வயது 25-க்கு குறைவாக இருக்கக் கூடாது. கீழே சொல்லப்பட்டுள்ள குறைபாடுகள் எவையேனும் உள்ளவர்கள் மாவட்டக்குழு அறங்காவலர்களாக நியமனம் செய்ய தகுதியற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் விண்ணப்பம் பெற்று கொள்ள வேண்டியதில்லை. ஒழுக்ககேடு சம்பந்தமான குற்றத்துக்காக ஒரு குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப் பெற்று அத்தகைய தண்டனை மாற்றப்பெறாமல் அல்லது மேற்படி குற்றம் மன்னிக்க பெறாமல் உள்ளவர்கள். கடனிருக்க சக்தியற்றவரென்று தீர்மானிக்கப்பட்டவர்கள் அல்லது அவ்வாறு தீர்மானிக்கப்பட வேண்டுமென விண்ணப்பம் செய்து கொண்டவர்கள்.

மேற்படி கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ள கட்டளைகளின் அறங்காவலராக இருப்பவர்கள். யாதொரு கோயிலின் அறங்காவலராக ஏற்கனவே இருந்து நிர்வாக குழுவினால் அல்லது மேற்படி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் நீக்கப்பட்டவர்கள் அல்லது தள்ளிவிடப்பட்டவர்கள். ஒரு அறங்காலரின் அலுவலல்களை நிறைவேற்றவும், கடமைகளை செய்யவும், இயலாத வண்ணம் சித்தசுவாதீனமற்ற நிலை, மனக்கோளாறு அல்லது அங்கக்கோளாறு, தொழுநோய் அல்லது அருவருக்கத்தக்க யாதொரு நோயால் பீடிக்கப்பபெற்றவர்கள். அறநிலையத்தின் அக்கறைகளுக்கு விரோதமதகச் செயலாற்றி இருப்பவர்கள்.

மத்திய அரசின் பணியிலிருந்தோ அல்லது மாநில அரசின் பணியிருந்தோ அல்லது உள்ளாட்சி மன்றங்களின் பணியிலிருந்தோ நீக்கப்பெற்றவர்கள். அறநிலையத்தின் சார்பாக அல்லது அறநிலையத்திற்கு எதிராக ஊதியம் பெறும் வழக்கறிஞர்களாக அமர்த்தப்பெற்றவர்கள். அறநிலையத்தின் குத்தகைதாரராகவோ அல்லது வேறு உடன்படிக்கையில் பற்று உள்ளவராகவோ அல்லது அறநிலையத்தில் நடைபெறும் யாதொரு வேலையில் பாத்யதை உடையவராகவோ அல்லது அறநிலையத்திற்கு யாதொரு வகையில் சேர வேண்டிய தொகையை பாக்கி வைத்திருப்பவர்களாகவோ உள்ளவர்கள்.

இந்து சமயத்தினை பின்பற்றாதவர்கள். அரசு அலுவலர்கள், அரசு நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனி நிறுவனங்கள், அரசு சார்பான நிறுவனங்களில் பணிபுரிவோர். திருக்கோயில்களில் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட மாவட்டக்குழு ஏற்படுத்தி தகுதி வாய்ந்த நபர்களிட்மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

Related Stories:

More
>