நீலகிரியில் 17 பயனாளிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 17 பயனாளிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு  அரசு எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை எண்.14ன் படி 2021-22ம் ஆண்டுக்கு  ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும்  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நீலகிரி  மாவட்டத்தில் தற்போது விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச  விவசாய மின் இணைப்பு (சாதாரணம்) திட்டத்தின் கீழ் 17 பயனாளிகளுக்கு இலக்கு  நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 7 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சுயநிதி  திட்டம் ரூ.50 ஆயிரம் திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு இலக்கு நிர்ணயம்  செய்யப்பட்டு மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. அதிவிரைவு திட்டத்தின் (தட்கல் 2021-22) கீழ் இதுவரை 88  விண்ணப்பங்கள் பெறப்பட்டு 12 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  முதற்கட்டமாக 9 பயனாளிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர்  ராமசந்திரன் கலந்துக் கொண்டு 9 விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு  சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் மோனிகா ராணா,  மின் வாரிய செயற்பொறியாளர் பிரேம்குமார் நாயர் மற்றும் அதிகாரிகள்  உடனிருந்தனர்.

Related Stories:

More
>