கோமாரி நோய் தாக்கும் அபாயம் உள்ளதால் கால்நடைகளுக்கு விரைவில் தடுப்பூசி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு 2வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. ஆனாலும், முதல் சுற்று கோமாரி நோய்க்கான தடுப்பூசி செலுத்தி 8 மாதங்கள் கடந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. மழை காலத்தில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, கோமாரி நோய் தடுப்பூசி அரசு சார்பில் அனைத்து கால்நடைகளுக்கும் விரைந்து செலுத்தப்பட வேண்டும். எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, தடுப்பூசி மருந்தினை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி, எங்கெல்லாம் 2வது சுற்று கோமாரி நோய்க்கான தடுப்பூசி செலுத்த தேவையான உத்தரவை வழங்கிட வேண்டும்.

Related Stories:

More
>