தார் பாலைவனத்தில் அஜித் பைக் பயணம்

சென்னை: எச்.வினோத் இயக்கத்தில் நடித்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், நடிகர் அஜித் குமார் இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகா எல்லை சென்ற அவர், அங்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பிறகு அங்கிருந்து புறப்பட்ட அவர், நேபாள தலைநகர் காத்மண்டு சென்று திரும்பும் வழியிலுள்ள தார் பாலைவனத்தில் ஓய்வெடுத்தார். அவர் பைக்கில் சாய்ந்தபடி தண்ணீர் அருந்தும் போட்டோவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories: