பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டர் பக்கம் முடக்கம்: மத மோதல்களை தூண்டும் பதிவுகள் காரணமாக நடவடிக்கை..!

சென்னை: மத மோதல்களை தூண்டும் வகையில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள பாஜகவை சேர்ந்த கல்யாண ராமனின் டிவிட்டர் பக்கத்தை டிவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கல்யாண ராமன் மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினர் கல்யாண ராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட அவரது பக்கத்தை முடக்க வேண்டும் என டிவிட்டர் நிறுவனத்துக்கும் பரிந்துரைத்தனர். தமிழ்நாடு காவல்துறையின் கோரிக்கையை அடுத்து கல்யாண ராமனின் டிவிட்டர் பக்கத்தை டிவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. ஏராளமான பதிவுகள் மத மோதலை தூண்டும் வகையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து டிவிட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Related Stories:

More
>