சட்டவிதிகளை பின்பற்றாமல் கோயில் நிலங்கள், கட்டிடங்கள் முறைகேடாக விற்பனை: அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கிறார் கமிஷனர்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இந்து சமய அறநிலையத்துறை அறநிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்கள் எதுவும் சட்டப்பிரிவுக்கு முரணாக பாராதீனம் செய்தால், அது இல்லா நிலையது. இதனை நீதிமன்றங்களும் பல்வேறு வழக்குகளில் உறுதிபடுத்தியுள்ளன. இதற்கு மாறாக, அறநிறுவனங்களை நிர்வகிக்கும் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பரம்பரை அல்லாத அறங்காவலர்களால் இந்து சமய அறநிலையக்கொடைகள் சட்டப்பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றாமலும், இத்துறையின் ஆணையரின் அனுமதி பெறாமலும் சட்டவிரோதமாக அறநிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களை பெருமளவில் நிலவிற்பனை, நிலப்பரிமாற்றம், அடமானம், நீண்டகால குத்தகை வழங்கியுள்ளனர் என அறியப்படுகிறது.

எனவே, இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றாமலும், இத்துறையின் ஆணையரின் அனுமதி பெறாமலும் சட்ட விரோதமாக அறநிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களை பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பரம்பரை அல்லாத அறங்காவலர்களால் நிலவிற்பனை, நிலப்பரிமாற்றம், அடமானம், நீண்டகால குத்தகை வழங்கியுள்ள இனங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு விவரங்களை உரிய ஆதாரத்துடன் அலுவலகத்திற்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும்.

Related Stories: