தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் நா.புவியரசன் கூறியதாவது: லட்சத்தீவு மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளில் (1.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்.

 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.25ம் தேதி(நாளை) புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், 26, 27ம் தேதிகளில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: