கோயில்களில் நகைகளை சரிபார்க்க 20 இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறையில் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை சரிபார்க்கவும், மதிப்பிடவும், நகை மதிப்பீட்டுக் குழுவில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் 20 காலியிடங்களை நிரப்புவுதற்காக இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்படுகின்றன. www.hrce.tngov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்கள் நவம்பர் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆணையர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

பொதுக்கல்வி பத்தாம் வகுப்பு அதற்கு சமமான கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும். தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளி, தாமிரம் போன்ற உலோக தகடுகள் மூலம் தங்கமுலாம் பூசுதல் மற்றும் இதர மதிப்புடைய பொருள்கள் பற்றி நுட்பமான தொழில் அனுபவம் பெற்று இருத்தலோடு ரத்தினம், வைரங்கள் போன்றவற்றின் தரத்தினை அறியும் திறம் பெற்றிருத்தல் வேண்டும். பொற்கொல்லர் தொழிலில் 5 ஆண்டு அனுபவமும், விநியோகஸ்தராக அல்லது வர்த்தகராக 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தங்கம் மற்றும் வெள்ளி வாகனங்கள் செய்தல், தெய்வத் திருமேனிகளுக்கு தங்கம், வெள்ளி முதலான கவசங்கள் செய்யும் அனுபவம் இருக்க ேவண்டும்.  

உரிய தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும்  எழுத்து தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். எழுத்து தேர்வு தமிழில் மட்டுமே நடத்தப்படும். இந்த தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் குறித்த விவரம் ஆகிய விவரங்களம் தனியர்களக்கு நேரடியாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இத்தேர்வில் தேர்வுக்குழுவால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்றுள்ள தேர்வர்கள் மட்டுமே அடுத்த கட்ட செயல்முறைக்கு அனுமதிக்கப்படுவர். கோயில் நகைகள் மற்றும் விலை உயர்ந்தவைகளை மதிப்பீடு செய்தல் செய்முறை தேர்வு தேர்வு குழுவால் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களே நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.

Related Stories: