சிமென்ட் விலையை குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் கடந்த வாரம் வரை 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.350 அல்லது அதற்கும் குறைவாகத் தான் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக ரூ.450 முதல் ரூ.470 வரை விற்கப்படுகிறது. 7ம் தேதி தென்னிந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம்  அறிவித்ததை விட இரு மடங்கு, அதாவது ரூ.120 அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து மிகக்குறைந்த விலையில் சிமென்டை இறக்குமதி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories:

More
>